வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

லெபனானில் பேஜர்கள் வெடித்ததில் பல ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் காயம்!!!


tamil news: லெபனான் முழுவதும் இன்றையதினம்(17.09.2024) டசன் கணக்கான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் அவர்கள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கையடக்க பேஜர்கள் வெடித்ததால் பலத்த காயம் அடைந்துள்ளனர்.


இவ்வாறு பேஜர் வெடிப்புகளால் காயமடைந்தவர்களில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பெயர் குறிப்பிட விரும்பாத ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர்,

"இவ்வாறு பேஜர்கள் வெடித்தது இஸ்ரேலுடனான ஒருவருட போரில் தமது குழுவிற்கு ஏற்பட்ட 'மிகப்பெரிய பாதுகாப்பு மீறல்" என்றார்.


அதாவது, ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலில் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டு வெடிக்கப்பட்டதாகவும்,

இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுபெற்ற லெபனான் குழுவிற்கும் இடையிலான போரில் ஒரு பெரிய வளர்ச்சியாக காணப்படுகின்றது.


மேலும்,

இது ஒரு பெரிய பாதுகாப்பு மீறல் - லெபனான் முழுவதிலும் இருந்து மனிதர்கள் காயமடைந்து, இரத்தம் வழிந்து தரையில் கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். மருத்துவமனைகளில் அவசரமாக இரத்தம் கேட்கும் நிலையும் ஏற்பட்டு;து.


தெற்கு லெபனான், நாட்டின் கிழக்கில் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் பரவலான பீதி நிலவிய இடங்களில் 'அருகில் ஒரே நேரத்தில் வெடிப்புகள்' பதிவாகியுள்ளன" என அவர் கூறினார்.


மேலும்,

"ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் சில மாதங்களுக்கு முன்பு தனது போராளிகளை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியிருந்தார்.


ஏனெனில் அந்த சாதனங்களை ஊடுருவிச் செல்லும் தொழில்நுட்பம் இஸ்ரேலுக்கு உள்ளதுஇ கோடர் கூறினார்


எனவே இப்போது அவர்கள் பேஜர்களைப் பயன்படுத்தி இந்த வித்தியாசமான தகவல்தொடர்பு முறையை நாடியுள்ளநிலையில் அவையும் ஊடுருவப்பட்டுள்ளமை தெரியவருகின்றது."

என அவர் கூறினார்.