கல்முனையில் காட்டுயானை தாக்குதல்! ஒருவர் பலி
tamil news: இன்றையதினம்(07.09.2024) அதிகாலைவேளையில் கல்முனை மாநகர பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு பின்னாலுள்ள வயல் வீதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாபகரமாக பலியானார்.
பேரூந்து தரிப்பு நிலையத்தில் வழமையாக யாசகம் எடுக்கும் செல்லையா வேலாயுதம்(வயது 70) என்பவரே அதிகாலைவேளையில் குறித்த வீதியால் செல்லும்பொழுதே இவ்வாறு யானை தாக்குதலில் பலியாகியுள்ளார்.
மேலும் இவருக்கு 2 பெண்பிள்ளைகளும் ஒரு மகனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்