இறுதிக் கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவு!!!
tamil news: இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனுக்கு நேற்று முன்தினம்(18.09.2024) யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற பிச்சாரககூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்துகொண்டனர்.
தேர்தல் அமைதிக்காலம் தொடங்க முன், வேட்பாளருக்கான இறுதிப் பிரச்சாரக்கூட்டமாக நல்லூர் கிட்டுப்பூங்காவில் இடம்பெற்ற இந்தக்கூட்டம் இடம்பெற்றது.
தேர்தல் அமைதிக்காலத்தில் அனைத்து பேரணிகள் மற்றும் வீடுவீடாக பிரச்சாரம் செய்வது தடைசெய்யப்பட;டுள்ள நிலையில் பிரச்சாரம் முடிவடையும் வேளையில் வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் அரியநேந்திரன் அவர்களுடைய பிரச்சாரத்தில் மக்களின் பங்குபற்றல் அதிகமாக அமைந்திருந்தது.
இம்மாத தொடக்கத்தில் பிறிதொரு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பா. அரியநேந்திரன் அவர்கள்
"சர்வதேச சமூகத்திற்கும், தென்னிலங்கைக்கும் தமிழர் பிரதிநிதிக்குரலாக மாறமுயல்கின்றோம்,
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறோம்."
என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமிழ்ப்பொது வேட்பாளராக களமிறங்கும் பா. அரியநேந்திரன் அவர்கள் 'சங்கு' சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.