பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!!!
tamil news: 2024 இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 இடம்பெறவுள்ளநிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 122 சுயேட்சைக் குழுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை(04.10.2024) வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக நேற்று மட்டும் சுமார் 36 குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தேர்தல் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது.