காவற்துறை காதலனை தேடிச்சென்று திருடிய காதலி!
tamil news: களுவாஞ்சிக்குடி காவற்துறை நிலையத்தில் பணிபுரியும் காவற்துறை உத்தியோகத்தரை காதலித்து முல்லைத்தீவு ஒட்டிசுட்டானிலிருந்து தேடிவந்த காதலிக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் காவற்துறை உத்தியோத்தரின் வீட்டில் இருந்த சுமார் 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச்சென்றதாக தலைமறைவாகிய காதலியை(வயது 33) ஓட்டிசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றையதினம்(01.10.2024) உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த திருமணமாகி குழந்தையுள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஓட்டிசுட்டான் காற்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளநிலையில் அங்கு 33 வயதுடைய பெண் ஒருவரை தான் திருமணம் செய்யில்லை என கூறி காதலித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த உத்தியோகத்தர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி காவற்துறை நிலையத்துக்கு இடமாற்றமாகி சென்றநிலையில்,
காதலனைத்தேடி குறித்த காதலி கடந்த ஜூன் மாதம் களுவாஞ்சிக்குடி காவற்துறை நிலையத்துக்கு சென்று காதலனை சந்தித்தபோது அவர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதையறிந்ததுடன், தன்னை காதலன் ஏமாற்றிவிட்டதாக அங்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து குறித்த காவற்துறை உத்தியோகத்தரை அங்கிருந்து வாழைச்சேனை காவற்துறை நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காத்தான்குடி காவற்துறைப் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் காவற்துறை உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் பிரச்சனையை கேட்டறிந்த நிலையில்இ தனது வீட்டிற்கு கூட்டிச்சென்று தங்க வைத்துள்ளார்.
இவ்வாறு 3 தினங்கள் சென்றநிலையில் ஜூன் 10ம் திகதி குறித்த பெண் தான் வீட்டிற்கு செல்வதாக கூறி அங்கிருந்து வெளியேறிள்ளார்.
இந்நிலையில் தனது தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ளதை அறிந்த குறித்த பெண் உத்தியோகத்தர் காற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திருடிய பெண் 3 மாதங்களாக தலைமறைவாகியதாகவும்,
அவரை திங்கட்கிழமை(30.09.2024) முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் வைத்து காத்தான்குடி காவற்துறை கைதுசெய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.