இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட அமெரிக்ககுண்டு யப்பானில் வெடித்தது!!!
tamil news: இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா யப்பானிய விமானநிலையத்தில் வீசிய வெடிக்காத குண்டு நேற்று முன்தினம்(02.10.2024) வெடித்ததில் 80இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்மேற்கு யப்பான் மியாசாகி விமானநிலையத்தில் குண்டு வெடித்தபோது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும்,
அருகில் விமானம் எதுவும் இல்லை எனவும் நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற காவல்துறையினரின் விசாரணையில் சுமார் 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாகவும்,
அதனால் சுமார் 7m விட்டமும் 1m(3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் உறுதிசெய்யப்பட்டன.
அதன்போது பதிவுசெய்யப்பட்ட காணொளி ஒன்றில் குண்டுவெடிப்பு நிலக்கீழ் துண்டுகளை நீரூற்று போல காற்றில் வீசுவதைக் காட்டுகின்றது.
மேலும் இரண்டாம் உலகப்போரின்போது வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் கணக்கிலான குண்டுகள் ஜப்பானைச் சுற்றிப்புதைந்துகிடப்பதும், சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களில் வெளிப்படுவதும் குறிப்பிடத்தக்கது.