யாழில் காய்ச்சலால் யுவதி மரணம்!
tamil news: நேற்றையதினம்(04.10.2024) உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த யுவதி(வயது 19) யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
காய்ச்சலுக்கு மருத்துவம் பெற இந்த யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிப்பட்டுள்ளதை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டதையடுத்து 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.