குரங்குகளை கணக்கிடுவதால் தீர்வு இல்லை – ஒண்ணுக்கு 1,000 வழங்க வேண்டும்!
tamil news:
"விவசாயத்தில் தன்னிறைவு பெற, பயிர்செய்கைகளை சேதம்செய்யும் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
எனவே குரங்குகளை பிடித்து ஒப்படைத்தால், ஒரு குரங்குக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில் பரபரப்பு கருத்து
2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் கீழ், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அவர் இந்த கருத்தினை முன்வைத்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
"விவசாயத்தை மேம்படுத்துவதற்கான அரசின் திட்டங்களை வரவேற்கின்றோம்.
விவசாய தன்னிறைவு பெற்றால், நாடும் மக்கள் அனைவரும் பயனடைவார்கள்.
எனவே, சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம்."
என்றார்.
காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு மோசமான பாதிப்பு
காட்டு விலங்குகளால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.
குறிப்பாக, குரங்குகள் வருடத்திற்கு சுமார் 90 மில்லியன் தேங்காய்களை நாசம் செய்கின்றன என்று விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
காட்டு விலங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கருத்தடை செய்வது, அதிக இனப்பெருக்கம் கொண்ட விலங்குகளை தனித்த காட்டு பகுதிகளுக்கு மாற்றுவது போன்ற யோசனைகள் இருந்தன.
ஆனால் அதிக செலவாகும் காரணத்தால், அவை செயல்படுத்தப்படவில்லை.
கணக்கெடுப்பால் தீர்வு கிடைக்காது – உடனடி நடவடிக்கை அவசியம்!
மார்ச் 15ஆம் தேதி முதல் வீட்டு தோட்டங்களிலும்,
விவசாய நிலங்களிலும் வரும் காட்டு விலங்குகளை கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆனால், கணக்கெடுப்பதால் பிரச்சினை தீராது.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க, பயிர்களை காப்பாற்ற, குரங்குகளை பிடித்து ஒப்படைத்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்.
இதனால் விவசாயிகளுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தாமல் விவசாயத்துறையில் வளர்ச்சி இல்லை.
ஆகவே, பேசுவதற்குப் பதிலாக, உடனடி தீர்வு வழங்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.