யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 11,081 குடும்பங்கள் நிலமின்றி நிர்க்கதி!
tamil news:
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 11,081 குடும்பங்கள் தங்களுக்கு நிலப்பகுதி இல்லை என மாவட்டச் செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அதாவது 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் காணிகள் வழங்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.
அதில்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலகப்பகுதியில் 2,828 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலகப்பகுதியில் 1,855 குடும்பங்களும், உடுவில் பிரதேச செயலகப்பகுதியில் 1,176 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலகப்பகுதியில் 823 குடும்பங்களும், கரவெட்டி பிரதேச செயலகப்பகுதியில் 796 குடும்பங்களும், பருத்தித்துறை பிரதேச செயலகப்பகுதியில் 730 குடும்பங்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பகுதியில் 568 குடும்பங்களும், மருதங்கேணி பிரதேச செயலகப்பகுதியில் 342 குடும்பங்களும், வேலணை பிரதேச செயலகப்பகுதியில் 456 குடும்பங்களும், தெல்லிப்பழை பிரதேச செயலகப்பகுதியில் 526 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப்பகுதியில் 589 குடும்பங்களும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பகுதியில் 256 குடும்பங்களும், சங்கானை பிரதேச செயலகப்பகுதியில் 109 குடும்பங்களும், காரைநகர் பிரதேச செயலகப்பகுதியில் 27 குடும்பங்களும் காணியின்றி தவிப்பதாக தெரியவந்துள்ளது.