வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

காலியாகங்கையில் காணாமற்போன 19 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுப்பு!


tamil news:

காணாமற்போன 19 வயது இளம்பெண்ணின் உடல், இலுக்‌மண்டிய பகுதியில் காலியாகங்கையின் கரையில் மிதந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.


காவற்துறையினரின் தகவலின்படி, ரைகம்வத்த, இங்கிரியாவில் வசித்த இளம் பெண் மார்ச் 2ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.


இதையடுத்து, அவரது சகோதரர் இங்கிரியா காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.


'காவ்யா' என்ற அந்த இளம்பெண், இங்கிரியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.


அவர் கடைசியாக மார்ச் 2ம் திகதி மாலை 5.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு புறப்பட்டதற்குப் பிறகு காணவில்லை.


அத்துடன், ஹல்வத்துறை பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியருடன் அவர் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


காவற்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, காவ்யா காணாமல் போன தினம், மார்ச் 2ம் தேதி, அவர் இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.


அதற்குப் பிறகு எந்த தொடர்பும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட அதே நாளில்,

ஹல்வத்துறையில் உள்ள வீட்டொன்றில் குறித்த ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இறந்து கிடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இங்கிரியா மற்றும் புலத்சிங்கள காவற்துறை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.