1983 கலவரம்? சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீக்கிரை!
tamil news:
நுவரெலியா மாவட்டத்தின் நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு சிங்களப் பாடசாலையில் கல்விகற்கும் தமிழ் மாணவன், சக மாணவர்களால் தீ வைத்துத் எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில்,
இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதாவது,
நாவலப்பிட்டி தொகுதியை சேர்ந்த ஒரு சிங்கள பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவன் ஒருவரை அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் சக மாணவர்கள் எரியக்கூடிய திரவமாகிய 'டினர்' ஐ ஊற்றி எரித்துள்ளார்கள்.
இதனையடுத்து கம்பளை வைத்தியசாலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த சிறுவன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஆனால் இச்சம்பவம் குறித்து இதுவரை பாடசாலை நிர்வகத்தினரோ, காவற்துறையினரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.