வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

2ம் உலகப்போர்க்கால குண்டு கண்டுபிடிப்பு – புகையிரதங்கள் நிறுத்தம்!!!


tamil news:

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் மிகப்பெரிய புகையிரத நிலையமான Gare du Nord-க்கு செல்லும் பாதையில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால்,

அங்கு புகையிரத போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


அதாவது,

SNCF புகையிரத நிறுவனம் தெரிவித்ததாவது,

பாரிசின் புறநகர்ப் பகுதியான Saint-Denis-ல் நடைமுறையிலிருந்த பராமரிப்பு பணிகளின் போது இரவு நேரத்தில் பாதையில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து, TGV மற்றும் Eurostar உள்ளிட்ட எல்லா புகையிரத சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.


இதனையடுத்து நாள்தோறும் சுமார் 7 லட்சம் பயணிகள் பயணிக்கும் Gare du Nord நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.




Eurostar அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி,

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காலை நேரத்திலேயே மூன்று பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.


லண்டன், பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் கடும் தாமதத்தை எதிர்கொண்டனர்.


இவ்வெடிகுண்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.


இருப்பினும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யூரோப்பில் நடைபெறும் கட்டுமான, பராமரிப்பு பணிகளின் போது பழைய வெடிகுண்டுகள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.