2050ல் இலங்கை இன்னும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும்! கதறுகின்றார் ரணில்
tamil news:
"இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது.
2050ல் இன்னும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும்."
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
"இந்தியா நமது நெருங்கிய அண்டைநாடு.
அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல.
எனவே இலங்கை செய்யவேண்டியது இந்த உறவை சிறப்பாக பயன்படுத்துவதாகும்.
இலங்கை தனது வேலையை இந்தியா மூலம் செய்யவேண்டும்.
அந்தநேரத்தில் இலங்கை 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெறவில்லையென்றால் நமது நாடு என்னவாக இருந்திருக்கும்?
இந்தியாவினுடைய அதானி குழுமத்தின் முதலீட்டுமுயற்சி இலங்கைக்கு மேலும் பல முதலீடுகளை கொண்டுவந்தது."
என அவர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமன்றி முதலீட்டை முன்னுரிமையாக கொண்டு இலங்கை முன்னேற இதுவே ஒரே வழி.
இந்தியாவை நாம் நிராகரித்தால் நாம் ஒருபோதும் வளர்ச்சி அடையமாட்டோம் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் முன்னேற இந்த பாதையை பயன்படுத்துவதில் கவனம்செலுத்தவேண்டும் என ரணில் கூறியமை குறிப்பிடத்தக்கது.