போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி 25% அதிகரிப்பு!
tamil news:
போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான வெகுமதி தொகையை 25% இனால் அதிகரித்து வழங்க தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள காவற்துறை மாஅதிபர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் பெப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
இது சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் போக்குவரத்து காவலர்களின் முயற்சிகளை பாராட்டி ஊக்குவிக்கவே மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை அறிவித்துள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்