வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நீதிமன்ற உத்தரவை மீறிய 27 பேர் கைது!


tamil news:

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை காவற்துறையினர் நேற்றையதினம்(27.03.2025) இரவு கைது செய்துள்ளனர்.


அதாவது,

பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார அமைச்சுக்கு முன்பாக நேற்றையதினம்(27.03.2025) பிற்பகல் இணை சுகாதார அறிவியல்பீட மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர்பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மற்றவர்களும் இதில் இணைந்துள்ளனர்.


தொடர்ந்து அங்கு 8 பிரதிநிதிகள் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியபோதிலும்,

அது பலனளிக்காததால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆனால் இதனை பொருத்துக்கொள்ளமுடியாத காவற்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.



ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி குறித்து காவற்துறையினர் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்தனர்.


அதன்படி மருதானை காவற்துறைப்பிரிவிலுள்ள மருத்துவமனை சதுக்கம், சுகாதார அமைச்சு மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.


அதுமட்டுமன்றி டீன்ஸ் வீதி, டி சேரம் வீதி, ரீஜண்ட் வீதி மற்றும் தேசிய மருத்துவமனை சதுக்கத்தை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளை தடுப்பதையும்,

போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதையும்,


சுகாதார அமைச்சின் முன்னால் நிற்பதையும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.


இதனையடுத்தே நீதிமன்ற உத்தரவை மீறிய அந்த குழுவினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.