வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வவுனியாவில் 40 மணித்தியாளங்கள் மின்தடை: மின்சார சபையின் அலட்சியம்!


tamil news:

வவுனியாவில் 40 மணித்தியாளங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக மக்களின் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து,

பொதுமக்கள் யாழ்ப்பாணம் மின்சாரசபை அலுவலகத்திற்குத் தொடர்ந்து புகார் தெரிவித்திருந்தனர்.


இருப்பினும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் மார்ச் 5ஆம் தகதி மதியம் 3.36 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டதையடுத்து,

மின்சார சபையின் யாழ்ப்பாண அலுவலகத்திற்குப் புகார் செய்யப்பட்டது.


அலுவலகத்திலிருந்து புகார் பெற்றமைக்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தாலும், மின்சாரம் திரும்ப வழங்கப்படவில்லை.


தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படாததால் மீண்டும் மின்சார சபையோடு தொடர்பு கொள்ளப்பட்டது.


ஆனால், ‘திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்ற பதில் மட்டுமே வழங்கப்பட்டதாகவும்,

எந்தவொரு செயல்பாடும் இல்லாததால் மக்கள் இன்னல்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தொடர்ந்து மின்தடை 24 மணித்தியாளங்களை கடந்த நிலையில்,

மார்ச் 7ஆம் திகதி மாலை மீண்டும் யாழ்ப்பாண அலுவலகத்துடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டனர்.


அப்போது, வவுனியா அலுவலகத்துடன் பேசுமாறு அறிவிக்கப்பட்டது.


இதன்போது, வவுனியா மின்சார அலுவலகத்துடன் தொடர்புகொள்ளப்பட்ட போது,

அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே பதிலளித்துள்ளார்.


மின்சார இணைப்பு மீண்டும் வழங்கப்படாமைக்கு காரணம் குறித்து வினவியபோது,

பாதுகாப்பு உத்தியோகத்தர்,

“எனக்கு வழங்கப்பட்ட உத்தரவை மட்டுமே நான் பின்பற்றுகிறேன்”

என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், மின்தடை 40 மணித்தியாளங்களை கடந்த நிலையில்,

மார்ச் 7ஆம் திகதி காலை 10 மணியளவில் மின்சார சபை ஊழியர்கள் வந்து திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


வவுனியா மின்சார சபையின் அலட்சியமே இத்தகைய நிலைமை ஏற்பட காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


மேலும், இவ்வாறான மின்தடைகள் வவுனியாவில் அடிக்கடி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக எழுத்துமூலமாக புகார் ஜனாதிபதி செயலகத்திற்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.