வவுனியாவில் 56 பேரை தாக்கிய நோய் - 9 பேர் பலி!
tamil news:
காசநோயினால் வவுனியாவில் கடந்த 2024ம் ஆண்டில் மாத்திரம் சுமார் 56 பேர் வரை நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் ஒன்பது பேர் இறந்துள்ளதாக வவுனியா மாவட்ட காசுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய அதிகாரி கே சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றையதினம்(24.03.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த 2024ம் ஆண்டு வவனியா மாவட்டத்தில் 56 நோயாளர்கள் காச நோயாளர்களாக இனங்காணப்பட்டனர்.
அதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் நோய் வந்து உரியநேரத்தில் சிகிச்சைக்கு வராமல் காலதாமதமாக வந்தமையாலேயே அந்த மரணம் ஏற்பட்டது.
அந்தவகையில் குறிப்பாக தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு மேற்பட்ட இருமல்,
மாலை நேரத்தில் காய்ச்சல்,
உணவில் நாட்டமின்மை,
உடல் நிறை குறைவடைதல்,
சளியுடன் இரத்தம் வெளியேறல்
இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.
மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளி பரிசோதனையினை இலவசமாக செய்துகொள்வதன் மூலம் இந்த நோயினை இனங்காணலாம்."
என்று தெளிவுபடுத்தினார்.