56 மனித சிறுநீரகங்களை விற்றார் - உக்ரேனிய பெண் கைது!
tamil news:
உலக அளவில் சட்டவிரோத மனித உறுப்பு விற்பனை தொடர்பாக தேடப்பட்டுவந்த உக்ரேனிய பெண் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான க்செனியா பி என்ற இவருக்கு,
2017 முதல் 2019 வரை 56 மனித சிறுநீரகங்களை சட்டவிரோதமாக பெற்று அவற்றை கள்ளச்சந்தையில் விற்றதாக கசகஸ்தான் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து, 2020ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க இண்டர்போல் சிவப்பு அறிவிப்பு வெளியிட்டு தேடிவந்தது.
சமீபத்தில்,
மார்ச் 11 அன்று உக்ரைன் - போலந்து எல்லையில் அவரை போலந்தின் பாதுகாப்புப் படையினர் கைதுசெய்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கசகஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கவேண்டிய இவர் போலந்தில் எப்படிக் கைதுசெய்யப்பட்டார்? என்பது தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக வெளிவரவில்லை.
தொடர்ந்து அவரை ஒரு வாரம் காவலில் வைக்க போலந்து நீதிமன்ற அனுமதி கேட்டுள்ளதாகவும்,
அதன் பின்னர் அவர் கசகஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
க்செனியா பி,
உக்ரைன், கசகஸ்தான், அர்மேனியா, அஜர்பைஜான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழும் ஏழ்மையான மக்களின் பொருளாதார நிலையை காரணம் காட்டி,
அவர்களிடமிருந்து சிறுநீரகங்களை பெற்றுக்கொண்டு அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.