மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நோயாளி! யாழ்ப்பாணத்தில் சம்பவம்
tamil news:
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினர் வழங்கிய தகவலின்படி,
கைதுசெய்யப்பட்டவர் 36 வயதுடையவராகும்.
மேலும் அவர் மருத்துவமனையில் தனியார் தூய்மை பணி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்,
மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பழை காவற்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்