வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்த முயற்சியாம் – புலம்புகிறார் சிவஞானம்


tamil news: 

இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் சிங்கள தேசிய நிகழ்ச்சிநிரலை ஆதரிக்கும் சில தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றன.


கட்சியின் யாப்பின் அடிப்படையில் தான் நான் பதில் தலைவராக செயற்படுகிறேன்,

அதேபோல் சுமந்திரன் பதில் செயலாளராக செயற்படுகிறார்.


பாரம்பரிய தமிழரசுக்கட்சியை எந்தக் காரணத்திற்காகவும் பிளவுபடுத்த முடியாது.


கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் கொள்கைகளை மதித்து செயல்படுவார்கள் என்று தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.


தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன


யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை(13.03.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

தமிழரசுக்கட்சி புதிதாக உருவாக்கப்படுவதாகவும்,

கல்வியாளர்கள், இந்திய தமிழ்த்தேசியவாதிகள், மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து புதிய கட்சியை உருவாக்க திட்டமிடுவதாகவும் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறினார்.


மேலும், கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் இதற்கு ஆதரவளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததையும் அவர் மறுத்தார்.


தமிழரசுக் கட்சி பிளவுபடாது


தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்,

புதிய கட்சி உருவாக்கும் யோசனை எவரிடமும் இல்லை என்பதற்கான உறுதிப்பாட்டை பெற்றதாகவும், சில தரப்பினர்கள் போகாதவழியில் தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அதற்கே உண்மையாக இருப்பதுடன், தமிழரசுக் கட்சி பிளவுபடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.


கட்சியை இலக்குவைத்து போலி பிரச்சாரங்கள்


சிங்கள தேசிய நோக்குடன் செயற்படுபவர்கள் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் மத்தியில் தவறான சித்தரிப்பை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.


எனவே, உண்மை நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


உள்ளூராட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான தலைமைத்துவம் கட்சிக்கு உள்ளது என்பதால்,

பல்வேறு போலியான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.



தேர்தல் வெற்றி மற்றும் எதிர்கால அரசியல்


முன்னிலையில் உள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையுடன் செயல்படுவதாகவும், தற்போதைய தேர்தல் முறைமையில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


தமிழ்த்தேசிய கொள்கைகளை பின்பற்றும் தரப்பினருடன் பேசுவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மாகாண சபை முறைமை தொடர்பான எதிர்பார்ப்புகள்


மாகாண சபை முறைமை அமலாகிய காலத்தில்,

மாவட்ட இணைப்பு குழுவின் இணைத்தலைவராக மாகாண ஆளுநர் செயல்பட்டுள்ளார்.


ஆனால் தற்போது, மாகாண ஆளுநர்களுக்கு இந்நிலை நீக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் மாகாண சபை முறைமையை விரும்புகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமருடன் மாகாண சபை முறைமை மற்றும் இதர முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளோம் என்றும் சி.வி.கே. சிவஞானம் கூறினார்.