வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
tamil news:
வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பகுதியில், நாயக்குளம் பகுதியில் உள்ள ஒருவரை,
உள்நாட்டு துப்பாக்கியுடன் வெள்ளிக்கிழமை(14.03.2025) கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரகசிய தகவலின் அடிப்படையில்,
ஓமந்தை காவற்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 58 வயதுடைய நாயக்குளத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்