தேசிய பூங்காவில் புகழ்பெற்ற யானை ‘யூனிகார்ன்’ துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!
tamil news:
மின்னேரிய தேசிய பூங்காவில் வாழ்ந்த புகழ்பெற்ற தந்த யானை ‘யூனிகார்ன்’, அடையாளந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க படபெண்டி நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(17.03.2025) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தின்போது அமைச்சர் கூறுகையில்,
யானை கடந்த மார்ச் 15ஆம் திகதி சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்,
அதன் உடல் வன உயிரியல் அதிகாரிகளால் நேற்றையதினம்(17.03.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வன பாதுகாப்புத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், தேசிய பூங்காவில் பரிச்சயமான இந்த தந்த யானையை கொன்றவர்களை அடையாளங்காணும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்