தொடங்கியது காவற்துறை மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்கள் அடையாளம் காணும் நடவடிக்கை!
tamil news:
காவற்துறை மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை கண்டறிந்து பட்டியலிடும் நடவடிக்கைகள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தேஷபந்து தென்னகோனை கைதுசெய்வதற்கான இணைந்த சுற்றிவளைப்புகள், பதில் காவற்துறை மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவுபவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்