மகிந்த, ரணில் அரசை விட அனுர காலத்தில் அதிகமாம்! சம்பிக்க ரணவக்க
tamil news:
"ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கங்களை விட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் செலவு 100 மில்லியன் ரூபாய்கள் அதிகம்."
இவ்வாறு கூறுகின்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"பெரிய வாகன அணிவகுப்புகள் இருக்காது,
நாடாளுமன்றத்திலிருந்து உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று அவர்கள் கூறினாலும்,
சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனத்தை பராமரிக்க முன்பைவிட அதிக செலவுகள் செய்யப்படுகின்றது."
அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,
ஜனாதிபதி சமீபத்தில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது அவருடன் ஒரேயொரு துணை வாகனம் மட்டுமே சென்றதாக ஊடகங்கள் காட்டியதாகவும்,
ஆனால் அவரது பாதுகாப்பிற்காக சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவற்துறை அதிகாரிகளும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.