வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழில் ஆசிரியரை தாக்கிய முகாமையாளர் - தாயாரும் சகோதரிகளும் கைது!


tamil news:

தனியார் நிதிநிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல்வீட்டிலுள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியநிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவமானது கடந்த 22ம் திகதி அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.


ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.


தொடர்ந்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி காவற்துறை நிலையத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.


இதன் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அச்சுவேலி காவற்துறையினர் இன்றையதினம்(24.03.2025) சந்தேகநபர்களை விசாரணைக்காக காவற்துறை நிலையம் வருமாறு அழைக்கப்பட்டனர்.



இதன்போது தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன அவரது தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் அச்சிவேலி காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.


எனினும் தாக்குதலை நடாத்திய பிரதான சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.