கட்சி தாவினார் விந்தன் கனகரட்ணம்!
tamil news: இலங்கை தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக விந்தன் கனகரட்ணம் இணைந்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TELO) நீண்டகாலமாக செயற்பட்டிருந்த இவர்,
இலங்கை தமிழரசுக் கட்சியில் இணையும் நிகழ்வு கட்சித் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்தின் கல்வியங்காடு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், விந்தன் கனகரட்ணத்திற்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகரசபையில் முன்னாள் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
மேலும், விந்தன் கனகரட்ணத்தின் மகனும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவருமான வி.கே. மார்க் அன்ரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்தார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்