உலகசந்தையில் எரிபொருட்களின் விலையில் மாற்றம் - இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல்!
tamil news:
ஈரான் மீது அமெரிக்கா செலுத்தும் கடுமையான அழுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இது இலங்கையிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் கூறப்படுகின்றது.
அந்த வகையில் உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 72 டாலர்களை தாண்டியுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை நேற்று 72.16 அமெரிக்க டாலர்களாக பதிவாகியிருந்தது.
இச்சூழ்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 100 அமெரிக்க டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Labels:
வெளிநாட்டு செய்திகள்