பிரிட்டனின் தடை - அரசிடமிருந்து வரவுள்ள அறிவிப்பு!
tamil news:
இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது தடைகளை விதிக்கும் பிரிட்டனின் முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு அறிவிக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜெதீசஸ் தெரிவித்தார்.
அரசதகவற் திணைக்களத்தில் இன்று(26.03.2025) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர செல்வா மற்றும் ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணா கோடு மற்றும் கருணா அம்மான் எனு அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகிய 4 நபர்கள் மீது பிரிட்டன் கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்