மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!
tamil news:
குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் ரத்தோட்டி காவற்துறை பிரிவின் கைகாவல இசுக்கம பகுதியில் பதிவாகியுள்ளது.
கொலைசெய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையை செய்ததாக கூறப்படும் கணவர் இருவரும் வைத்தியசாலையில் ஊழியர்களாக பணிபுரிந்தவர்கள் எனவும்,
குறித்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலை சம்பவம் இன்று(22.03.2025) அதிகாலை 5:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகின்றது.
கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தை கணவரான கணவர் ரத்தோட்டை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ரத்தோட்டை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்