மன்னாரில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட விநாயகர்: முருங்கனில் சிக்கினார்!
tamil news:
மன்னாரில் இருந்து கொழும்புக்கு பேருந்தில் பயணித்த நபர் ஒருவரிடம் இருந்து விற்பனைக்காக கடத்தப்பட்ட விநாயகர்சிலை முருங்கன் பகுதியில் கடந்த சனிக்கிழமை(15.03.2025) காவற்துறையினரால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
36 வயதுடைய சந்தேகநபர், மக்காச்சோளத்தால் நிறைக்கப்பட்ட பையில் விநாயகர் சிலையை கவனமாக மறைத்துவைத்து கொழும்புக்கு கொண்டுசெல்ல முயன்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை விசாரித்தபோது,
சிலை தங்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்தநிலையில் உறுதிப்படுத்தும் நோக்கில், அதன் மூக்கு மற்றும் கைகளை உடைத்து பரிசோதித்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் குறித்தநபர் இந்த சிலையை தனது மாமாவிடமிருந்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.