களியாட்ட விடுதி மோதல் - ஜோசிதவுக்கு சம்மந்தமில்லையாம்! கூறுகிறது காவற்துறை
tamil news:
கொழும்பு, ஜூனியன் பிளேசில் உள்ள இரவுநீர களியாட்டு விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை(21.03.2025) இரவு ஏற்பட்ட மோதலுக்கும், இனப்படுகொலை குற்றஞ்சாட்டப்பட்டவரான மகிந்த ராஜபக்சவின் மகன் ஜோசித ராஜபக்சவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை(21.03.2025) இரவு யோஷித ராஜபக்ச மற்றும் அவரது மனைவியுடன் குழு ஒன்று சென்றுள்ளது.
இதன்போது இரவுநேர களியாட்ட விடுதிக்கு வழியில் யோஷித ராஜபக்சவுடன் சென்ற குழுவும், களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலின் போது யோஷித ராஜபக்சவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தனர்.
இந்த மோதல் இரவுநேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து கம்பனிவீதி காவற்துறை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மோதல் ஏற்பட்ட நேரத்தில் யோஷித ராஜபக்சவும், அவரது மனைவியும் சம்பவ இடத்தில் இல்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யோஷித ராஜபக்சவும், அவரது மனைவியும் இரவுநேர களியாட்ட விடுதியை விட்டு வெளியேறிய பின்னரே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பனிவீதி காவற்துறை மேற்கொண்டு வருகின்றது.