யாழ். தலைமை காவற்துறை பதில் பொறுப்பதிகாரியின் மகனை கைதுசெய்யுமாறு உத்தரவு!
tamil news:
கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் தலைமை காவற்துறை நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி தண்டனை இடமாற்றத்தில்(Punishment Transfer) சென்ற காவற்துறை அதிகாரியின் மகனை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த காவற்துறை அதிகாரியின் மகன் வழக்கு ஒன்றினை இல்லாமல்செய்ய சுமார் 20,000 ரூபாவினை பொதுமகன் ஒருவரிடம் லஞ்சமாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறையிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
அந்தவகையில் குறித்த காவற்துறை அதிகாரிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டு இருக்கையில் குறித்தசம்பவம் தொடர்பான வழக்கானது திங்கட்கிழமை(10.03.2025) காவற்துறையினரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனையடுத்து லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 01.04.2025 இற்குள் கைதுசெய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.