கத்தியை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் வைத்தியர்! சபையில் சஜித்
tamil news:
நேற்றிரவு(10.03.2025) அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த ஒருவர் கத்தியை காண்பித்து மிரட்டி குறித்த பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், இதனால் ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவர் பாராமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்