வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இலங்கையிலும் பெரிய அளவில் நிலநடுக்கம் வரலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


tamil news:

"என்றைக்கோ ஒருநாள் இலங்கையிலும் பாரிய அளவில் நிலநடுக்கம் இடம்பெறலாம்."

இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


அதற்கேற்ப போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கையிலும் அண்மைக்காலமாக சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகின.


அவ்வாறான நடுக்கங்கள் அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்தும் வருகின்றன.


குறிப்பாக இலங்கையின் கீழாகவும்,

இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன."

என கூறினார்.



தொடர்ந்து நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கை பற்றி தெரிவித்தபோது,

"இதுவரை இந்த நிலநடுக்கங்கள் சேதங்களை ஏற்படுத்தவில்லை.


ஆனால் என்றைக்கோ ஒருநாள் இலங்கையிலும் பாரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம்.


அதற்கேற்ப போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.


ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் கண்டுள்ளன.


குறைந்தபட்சம் நிலநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகின்றது.


இல்லையெனில் 2004ம் ஆண்டில் வந்த சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது போல,

நிலநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்கமுடியாது என்பது உண்மை."

என குறிப்பிட்டார்.


சிறிதுகாலத்திற்கு முன்பு வவுனியா மாவட்டத்தில் நிலநடுக்கங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.