வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பரீட்சை காலங்களில் அலரும் ஒலிபெருக்கிகள்!!! காவற்துறை அசட்டையீனம்


tamil news:

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரான்பற்றில் கடந்த ஆறு நாட்களாக ஒலிபெருக்குகளின் ஒலியால் பரீட்சையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களும், பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.


குறிப்பாக பிள்ளைகள் அன்றைய பாடத்தினை இறுதிமீட்டல் செய்யும் நேரமான காலை 6:15 மணி தொடக்கம் ஒலிபெருக்கி மூலம் விளம்பர ஒலி எழுப்பப்படுவதால் மக்களும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பரீட்சை காலங்களில் ஒலிப்பெருக்கைகள் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.


ஆனால் குறிப்பாக இளவாலை காவற்துறை பிரிவிலும், சண்டிலிப்பாய் பிரதேசசெயலக பிரிவிலும் இக்கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்களால் கூறப்படுகின்றது.


அங்குள்ள குறிப்பிட்ட ஆலயம் ஒன்றில் ஆறு ஒளிப்பெருக்கைகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்புவதாக கூறப்படுகின்றது.


இதனையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அண்மைய காலங்களிலும் இவ்வாறான சட்டமீறல்களை பொதுமக்கள் காவற்துறையினருக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலருக்கும் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.