வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வீட்டுக்கடன் பெற காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!




tamil news:
உரிமைப்பத்திரங்கள் இல்லாதநிலையில் தங்கள் வசிப்பிடத்தை உறுதிசெய்யக்கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதிகள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் 'அனைவருக்கும் வீடு 2025' என்ற வீட்டுவசதி கடன்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்படும் இந்தக் கடன்திட்டத்தின் கீழ்,
கடன் விண்ணப்பதாரருக்கு சட்டப்பூர்வ பத்திரம் இல்லையென்றாலும் கூட அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் நீண்டகாலமாக வசித்துவருகின்றார் என கிராம அலுவலர் சான்றளிக்க வேண்டும்.

அது பிரதேசசெயலரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

காணி ஒரு காட்டுபகுதிக்கு சொந்தமானதல்ல என்பதும் இங்கு கவனிக்கவேண்டியது முக்கியம்.

நூற்றுக்கு வருடாந்த வட்டி வீதம் 12 ரூபாய் என 1.5 மில்லியன் ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம்.

புதிய வீடு கட்ட, வீட்டிற்கு ஒரு பகுதியை சேர்க்க அல்லது வீட்டின் மீதமுள்ள வேலையைச் செய்ய கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கடனுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் திருப்பிசெலுத்தும் காலமாக வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.