வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சிகிரியா: சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு – முதலுதவிச் சேவையின்மையே காரணம்?


tamil news:

சிகிரியா கோட்டையில் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இதற்கு முதலுதவிச் சேவைகள் குறைவாக இருப்பதே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக Ceylon Spirit சுற்றுலா சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


இச்சங்கத்தின் செயலாளர் என்.பி. விஜேசிங்க தெரிவித்ததாவது,

கடந்த 2-3 ஆண்டுகளில் சிகிரியாவில் முறையான முதலுதவிவசதி இல்லாததன் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதில் சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் அடங்குவதாக கூறினார்.


முதலுதவிச் சேவை குறித்து கடும் விமர்சனம்

“சிகிரியா அனுமதி சீட்டின் விலை ரூ. 11,000.

இவ்வளவு கட்டணமாக வசூலிக்கின்றநிலையிலும், குறைந்தபட்ச முதலுதவிச் சேவைகளைக் கூட வழங்கமுடியவில்லை என்பது மிகுந்த அவமானகரமான விடயமாகும்.


மேலும், எத்தனை உயிர்கள் பறிபோகவேண்டும், முதலுதவிச் சேவை ஏற்படுத்தப்படும் வரை?”

என்று அவர் கேள்வி எழுப்பினார்.


மேலும், சமூக வலைதளத்திலிடப்பட்ட பதிவொன்றில்,

“இச்சிக்கலைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு உள்ள சில உயர் அதிகாரிகள், சமூகவலைதளங்களில் கருத்துகளை எழுதுவதிலேயே நேரத்தை செலவழிக்கின்றனர்.


சிலர் அதிகாரப் பதவிகளைப் பிடிக்க கடுமையாக முயற்சி செய்துவிட்டு, அந்த பதவிகளைப் பெற்றதும் மறைந்துவிட்டனர்,”

என்று விஜேசிங்க விமர்சித்துள்ளார்.



அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம்

சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களாக, சுற்றுலா தலங்களில் அடிப்படை முதலுதவி வசதிகளை உறுதிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.