செவினுவர சூட்டு சம்பவம் - எரிந்தநிலையில் வான் மீட்பு!
tamil news:
செவினுவர சூட்டு சம்பவம் தொடர்பில் காவற்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் எரிந்த வான் மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை, தெவினபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மாத்தறை மேலதிக நீதவான் மாலின் சிரான் ஜெய சூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்றையதினம்(22.03.2025) விஜயம் மேற்கொண்ட அவர் விசாரணையை முன்னெடுத்துள்ளார்.
மாத்தறை, தெவினுவர தியூர சிங்காசன வீதியில் நேற்றிரவு 11:45 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
பிறந்தநாள் விழாவுக்கு சென்றபின் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மீது T56 மற்றும் இரண்டு 99 mm துப்பாக்கிகளுடன் வானில் வந்த அடையாளந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பின்னால் வந்த வான் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகின்றது.
அதன்பிறகு துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவற்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800m தொலைவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வான் எரிந்த நிலையில் இருப்பதை காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.