நியாயம் நிலைநாட்டப்படாவிட்டால் மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்க்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்
tamil news:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதியின்மை தொடர்ந்தால், மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதை தவிர வழியில்லையென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
"நீதி உறுதி செய்யப்படாவிட்டால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் உருவாகலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய மற்றும் தற்போதைய அரசுகள் பல வாக்குறுதிகள் அளித்தன.
ஆனால், எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் பிரதான காரணம், நீதி நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதே.
இருப்பினும், அமைப்பில் மாற்றம் இல்லையெனில், நாங்களும் எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதற்கான நேர்மையான பதிலை அரசு வழங்கினால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு நீதி கிடைத்ததாக உணர்வார்கள்.
இருப்பினும், இது முறையாக நடைபெறவில்லை என்றால், எதிர்ப்பை வெளிப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.”
என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.