நாட்டை விடுவித்தவர்களிற்கு தண்டனை; விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அரசியற்கைதிகளா? கதறுகிறார் அலிசப்ரி
tamil news:
"எங்கள் நாட்டை விடுவித்தவர்களிற்கு தண்டனை விதிக்கும் அதேவேளை,
குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை அரசியற்கைதிகள் என தெரிவித்து அவர்களை விடுதலைசெய்யவேண்டி வேண்டுகோள் விடுப்பது நியாயமற்றது மாத்திரமல்ல; இது மிகவும் ஒழுக்ககேடானது."
இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தெரியவருதாவது,
"உலகளாவியரீதியில் முன்னர் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு,அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக காணப்படுகின்றது.இந்த தடையே இலங்கையின் அப்பாவி தமிழ்மக்களிற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரமான அநீதிகளை இழைத்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றது.மூன்று தசாப்தகால மோதல் காரணமாக முழுநாடும் பாதிக்கப்பட்ட போதிலும், வடகிழக்கிலேயே மோதல்கள் பிரதானமாக இடம்பெற்றதால் தமிழ்சமூகமே அதிகளவு துயரங்களை சந்தித்துள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் தெற்கு கொழும்பிற்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர்.நாடு முழுவதும் தமது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.யுத்தம் 2009 இல் முடிவிற்கு வந்ததும் இலங்கையர்கள் கூட்டாக நிம்மதி பெருமூச்சினை வெளியிட்டனர்.யுத்தம் முடிவிற்கு வந்ததால் நன்மையடைந்தவர்களில் தமிழ் மக்களும் உள்ளனர்.வன்முறை இயக்கத்திடமிருந்து விடுதலைசெய்யப்பட்ட அவர்களிற்கு தேசியவாழ்க்கையில் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.இன்று தமிழர்கள் சமூகபொருளாதார அடித்தளத்தின் ஒருபகுதியாக உள்ளதுடன்,இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ் சமமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.இலங்கை ஒரு முழுமையாக குறைபாடற்ற தேசமில்லை.ஆனால், உலகில் குறைபாடுகளே இல்லாத நாடு என்ற ஒன்று உள்ளதா?சர்வஜன வாக்குரிமை, இலவச சுகாதாரம், இலவச கல்வி மற்றும் இனங்கள் மதங்களிற்கு இடையில் பாரபட்சத்தை காண்பிக்காத சமூகபாதுகாப்பு ஆகியவற்றை கொண்ட நாடு எங்களுடைய நாடு.இலங்கை கடந்தகாலங்களிலிருந்து மீளகட்டியெழுப்பப்படும் நாடு.அனைத்து இலங்கையர்களும், சமாதானம், கௌரவம் மற்றும் சமத்துவத்தை அனுபவிப்பதை உறுதிசெய்ய முயல்கின்றது.போரின் இறுதிகட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டதை எவரும் மறுக்கவில்லை.யுத்தம் அதன் இயல்பிட் துன்பகரமானது.ஆனால் உண்மை என்னவென்றால்,இலங்கை சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்கவும் ஆதரிக்கவும்,இலங்கை அரசாங்கம் அயராது உழைத்தது.அந்த வளங்களின் ஒரு பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் போர் இயந்திரங்களிற்கு பயன்படுத்துவார்கள் என தெரிந்தும் கூட.மோதல் இடம்பெற்ற காலம் முழுவதும் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஊடாக அனுப்பியது.விடுதலைப்புலிகளின் பகுதிகளில் செயற்பட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக சுகாதாரம், கல்வி போன்ற இலவச பொதுச்சேவைகள் தொடர்ந்தன.இதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இராணுவகட்டுப்பாட்டு பகுதியை நோக்கி ஓடிவந்தனர்; இராணுவத்திடமிருந்து ஓடவில்லை.விடுதலைப்புலிகள் இறுதி நிமிடத்திலும் தங்களை மனிதகேடயங்களாக பயன்படுத்திய நிலையில் உண்மையான பாதுகாப்பு எங்கிருக்கின்றது என்பது அவர்களிற்கு தெரிந்திருந்தது.நமது அனைத்து தவறுகளுடனும், இலங்கை ஒரு இனவெறி கொண்ட நாடில்லை.நாம் வேறொருவரின் நிலத்தை கைப்பற்றவில்லை.நமது ஆள்புல ஒருமைப்பாட்டை பாதுகாத்தோம்.நமது மக்களை நாம் பட்டினியால் வாடச்செய்யவில்லை.நமது அரசியலமைப்பு அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கவில்லை.இலங்கை நல்லிணக்க பாதையை தேர்ந்தெடுத்தது.சரணடைந்த 12,197 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு எதிராக நாங்கள் வழக்குதாக்கல் செய்யவில்லை.அதற்கு பதிலாக நாங்கள் அவர்களிற்கு புனர்வாழ்வளித்தோம்.அவர்களிற்கு இரண்டாவது வாய்ப்பை அளித்தோம்.அவர்களை சமூகத்தில் இணைத்தோம்.மத்தியவங்கி குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் உட்பட 27 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.நம்பிக்கையை வளர்ப்பதற்காக இதனை செய்தோம்.எங்கள் நாட்டை விடுவித்தவர்களிற்கு தண்டனை விதிக்கும்.அதேவேளை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை அரசியற்கைதிகள் என தெரிவித்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என வேண்டுகோள் விடுப்பது நியாயமற்றது மாத்திரமல்ல; இது மிகவும் ஒழுக்ககேடானது.அனைத்து இலங்கையர்களினதும் துன்பங்களை புறக்கணிக்கின்ற அமைதியை மீட்டெடுப்பதற்காக புரியப்பட்ட தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற செயல்."
இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு போரானது, இனவழிப்பு இல்லை.
பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று உலக நாடுகளிடம் வக்காளத்து வாங்கியவர்களில் முன்னணியில் இருப்பவர் இந்த அலிசப்ரி என்பது குறிப்பிடத்தக்கது.