விஞ்ஞான டிப்ளோமா பெற்றவர்களை ஆசிரியர் சேவைக்கு சேர்ப்பு!
tamil news:
தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
தேசிய கல்வியற்கல்லூரிகளில் 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாடப்பிரிவுகளை பயின்ற மாணவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான தகவல்சேகரிப்பு இணைய வழிமுறையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 28ம் திகதிவரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கமுடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி இணையதளமான www.mohe.gov.lk பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்