மத்திய வங்கி எச்சரிக்கை: AI மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள்!
tamil news: இணையத்தில் பரவிவரும் மோசடி விளம்பரங்களை அணுகும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என இலங்கை மத்திய வங்கி(CBSL) கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு(AI) பயன்படுத்து உருவாக்கப்பட்ட இவ்வகை போலி விளம்பரங்களில்,
மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கின் படங்களை தவறாக பயன்படுத்தி,
சிறிய முதலீட்டில் பெரும் லாபம் கிடைக்கும் என பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்த விளம்பரங்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி, மக்களை தவறாக வழிநடத்த முயலுகின்றன.
எனவே, அத்தகைய தவறான தகவல்களை நம்பாமல்,
உண்மையான தகவல்களுக்கு மத்திய வங்கி இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ ஊடகங்களை நாடுமாறு பொதுமக்களுக்கு வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்