யாழ். இலஞ்ச வழக்கில் பதில் பொறுப்பதிகாரியின் மகன் விளக்கமறியலில்!
tamil news:
யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், முன்னாள் காவற்துறை அதிகாரியின் மகன் இன்றையதினம்(17.03.2025) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதாவது,
யாழ். தலைமைப் காவற்துறை நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக இருந்த அதிகாரியின் மகன்,
ஒரு வழக்கை முற்றுப்படுத்துவதாகக் கூறி சுமார் 20,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த காவற்துறை அதிகாரி முல்லைத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் நபரை கைதுசெய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் சந்தேகநபர் இன்றையதினம்(17.03.2025) திங்கட்கிழமை தனது சட்டத்தரணி மூலமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நடந்த விசாரணைகளின் அடிப்படையில் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.