அல்ஜசீராவை விமர்சித்தார் ரணில் – காணொளி திருத்தப்பட்டதாக குற்றச்சாட்டு!
tamil news: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றையதினம்(06.03.2025) ஒளிபரப்பான அல்ஜசீரா நேர்காணலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதாவது ஊடகங்களிடம் பேசிய ரணில்,
இந்த நேர்காணலில் கலந்துகொண்ட 3 பேரில் இருவருக்கு தமீழீழ விடுதலைப்போராட்டத்தின் போராளிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் தெரிவிக்கையில்
"மனித உரிமை சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சற்குணநாதன் இந்த விவாதத்தில் இருப்பார் என எனக்குத் தெரியவந்தது.
ஆனால், பின்பு அவருக்குப் பதிலாக இருவர் கலந்துகொண்டதாகத் தெரிந்தது.
அவர்களே LTTE ஆதரவாளர்கள் என சொல்லப்பட்டது,"
என்றார்.
மேலும்,
"எனது பதில்கள் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை."
என அவர் புகார் தெரிவித்தார்.
"இலங்கை ஊடகங்களில் நேரடியாக பேசும்போது,
என்னசொன்னாலும் முழுமையாக வெளிவரும்.
ஆனால், அல்ஜசீரா எனக்கு 2 மணிநேர நேர்காணல் நடத்தியும்,
அதன் பாதியை மட்டும் வெளியிட்டு, பல முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டது,"
என்று ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார்.