வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அடேய் அர்ச்சுனா சபையில் கத்திய அமைச்சர்! கூறிய விளக்கம் என்ன?


tamil news:

நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருமையில் இல்லை தேவையேற்பட்டால் கீழ்மையிலும் விழிப்பேன் என கடறொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


அதாவது யாழ். மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(25.03.2025) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.


அதன்போது திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடையே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.


"அடேய் அர்ஜுனா" என்றும், "நிப்பாட்டுடா குமரன்" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கடற்றொழில் அமைச்சர் கத்தினார்.


தொடர்ந்து சபையினை கட்டுப்படுத்த முடியாதநிலையில் யாழ்.மாவட்ட செயலரின் மூலம் குறித்த கூட்டத்தினை நிறைவுசெய்ததாக தெரிவித்து கூட்டத்தினை இடையில் இடைநிறுத்தினார்.


"ஒரு அமைச்சராக இருந்த வண்ணம் நாடாளுமன்ற உறுப்பினரை இவ்வாறு சொல்லலாமா?

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கூட உங்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லை என குற்றம்சுமத்தியுள்ளாரே..."

என கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மேலும்

"எதிர்வரும் காலங்களில் ஒழுங்கான தலைமைத்துவத்துடன் நடைமுறைகளை எடுப்பீர்களா?"

என வினவியபோது,

"நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கின்றேன்."

என தெரிவித்துள்ளார்.