வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பிரச்சாரத்தில் மக்களுக்கு பணம் வழங்கினால் பதவி பறிபோகும் - பவ்ரல் எச்சரிக்கை!!!


tamil news:

"உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை பின்பற்றி தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடவேண்டியது சகல வேட்பாளர்களினதும் பொறுப்பாகும்."

இவ்வாறு பவ்ரல் தேர்தல் கண்காணிப்புகுழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோகன் கெட்டியராட்சி குறிப்பிட்டுள்ளார்.


எனவே தங்களது பிரதேசங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தாம் தகுதியானவர் என வேட்பாளர் நிரூபிக்க வேண்டும்.



அத்துடன்,

"ஊழலின்றி, பொதுச்சொத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படக்கூடியவர் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.


தேர்தலுக்காக கையூட்டல் வழங்கும் ஒரு வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றதன் பின்னர் அந்த பணத்தை வசூலிப்பதற்காக செயல்படுவார் என்ற விம்பத்தை மக்களிடையே தோற்றுவிக்கும்.


இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவர் பிரச்சாரத்தின்போது பொதுமக்களுக்கு பணம் வழங்கி உள்ளமை உறுதிப்படுத்தப்படுமாயின் அவர் தமது பதவியை இழக்க நேரிடும்."

எனவும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.