வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வவு. ஊர்வலத்திற்கு காவற்துறை பொறுப்பதிகாரி இடையூறு - ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்!!!


tamil news:

வவுனியாவில் காசநோயிற்கு எதிரான விழிப்புணர்வுபேரணி ஒன்று மேற்கொள்வதற்கு காசநோய் கட்டுப்பாட்டு பிரிவால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது அங்குவந்த வவுனியா போக்குவருத்து காவற்துறை பொறுப்பதிகாரி அனுமதி வழங்குவது தொடர்பில் இடையூறு செய்துள்ளார்.


அதாவது அனுமதி வழங்கமுடியாது என வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதன்போது தாம் வன்னி பிரதி காவற்துறை மாஅதிபரிடம் இதுதொடர்பில் தெரியப்படுத்தியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


எனினும் போக்குவரத்து பொறுப்பதிகாரி அனுமதி வழங்கமறுத்தார்.


இந்த சம்பவத்தை அங்கு கடமையில் நின்ற ஊடகவியலாளர்கள் இருவர் ஒளிப்பதிவு செய்தனர்.

அதையடுத்து நரன் ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் அழைத்து அவர்களது ஊடக அடையாள அட்டையை பெற்று அதனை பதிவுசெய்து அவர்களது நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.



அத்துடன் குறித்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்திருந்த முச்சக்கரவண்டிகளையும் அங்குநின்ற போக்குவரத்து காவற்துறையிடம் கூறி போக்குவரத்து பொறுப்பதிகாரி ஒளிப்பதிவு செய்திருந்தார்.


இறுதியில் குறித்த ஊர்வலம் தொடர்பில் வைத்தியர்கள் பிரதி காவற்துறை மாஅதிபர் வவுனியா மாவட்ட அரசஅதிபர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதன் அடிப்படையில் போக்குவரத்து காவற்துறைநிலைய பொறுப்பதிகாரி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.