வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இறுதிச்சடங்கில் ஏற்பட்ட பதற்றம் - கொழும்பில் குழுக்களாக பிரிந்து அடிதடி!


tamil news:

கொழும்பு புறநகர் பகுதியான பத்தரமுல்லயில் இறுதிச்சடங்கு வீடு ஒன்றில் நேற்றையதினம்(28.03.2025) காலை பதற்றநிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.


அரசியல் குறித்த உரையாடல் ஒன்று நீண்டுசென்றதையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கலல்கொட பகுதியில் இடம்பெற்ற இறுதிச்சடங்கின் போது இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் குறித்த வாக்குவாதம் வன்முறையாக வெடித்துள்ளது.


இதனை தொடர்ந்து வாக்குவாதம் நீண்டு முற்றியநிலையில் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு காவற்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில் வன்முறைநிலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


இறுதிச்சடங்கு நிகழ்விற்கு பெருமளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.


எனினும் வன்முறையின்போது எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.