முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
tamil news:
முல்லைத்தீவு, சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் பெருமளவிலான துப்பாக்கி ரவைகளை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் மற்றும் முல்லைத்தீவு காவற்துறையினர் இணைந்து நேற்று(14.03.2025) சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய,
சம்பவ இடத்தில் காணப்பட்ட ஒரு உரப்பையில் இருந்து T56 வகை துப்பாக்கி ரவைகள் 1,400 மீட்கப்பட்டுள்ளன.
பின்னர், மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு காவற்துறை நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆயினும், இந்த ரவைகள் பழுதடைந்த நிலையிலிருந்ததாக காவற்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்