புலம்பெயந்தோருக்கு டொனால்ட் டிரம்ப் கடைசி எச்சரிக்கை!!!


tamil news:

அரை மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தற்காலிக அகதிகள் அந்தஸ்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கியூபா கைதி நிகரகுவா மற்றும் ஜெனிசுலாவைச் சேர்ந்த மக்களின் தற்காலிக அகதிகள் அந்தஸ்தே இவ்வாறு ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் காலத்தில் மனிதாபிமான பேரோர் திட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் அல்லது வலிக்கட்டாயமாக வெளியேற்றப்படும் சிக்கலை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த 532,000 பேர்களின் வேலைக்கான உரிமம் மற்றும் வெளியேற்றப்படுவதில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன் செயலாளர் கிரிஸ்டி நோயம் இந்த 532,000 பேர்களின் அகத்தி அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளதையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்பதையும் உறுதிசெய்துள்ளார்.


ஏப்ரல் 24ம் திகதிக்குப் பிறகு இந்த மக்கள் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கும் உரிமை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.